ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏப்ரல் மாத இறுதிவரை இலவச உணவு வழங்க கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு!

கோவை: கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாத இறுதிவரை இலவச உணவு வழங்க கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கோவை: கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாத இறுதிவரை இலவச உணவு வழங்க கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாநகரில் கோவிட் –19 ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கடந்த சில தினங்களாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று முதல் இந்த மாத இறுதி வரை ஒவ்வொரு நாளும் 3500 உணவு பொட்டலங்களை தேவையானவர்களுக்கும், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தனியார் நிறுவனங்கள், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு சங்க உறுப்பினர்கள் வழங்க உள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தேவையானோருக்கு இந்த நெருக்கடியான சமயத்தில் உதவுவதற்காகக் கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தினர் சார்பில் ஏப்ரல் மாத இறுதி வரை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் செயலாளர் சிவக்குமார் தெரிவித்தனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...