நீலகிரி: குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகத்தில் 3 வேளையும் முட்டையுடன் கூடிய உணவு தனது சொந்த செலவில் இலவசமாக வழங்கப்படும் என்று குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தெரிவித்துள்ளார்.

குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு அம்மா உணவகத்தை பார்வையிட்டு உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கு சமைத்த மதிய உணவினை உண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 144 தடை உத்தரவு நீங்கும் வரை முட்டையுடன் கூடிய 3 வேளை உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, குன்னூரில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் உணவு உண்டு செல்கின்றனர். மேலும், இதற்கு மேற்பட்டு எத்தனை பேர்கள் வந்தாலும் இலவசமாக உணவு உண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பால்வளத் தலைவர் எல்.மணி, நகர செயலாளர் டி. சரவணகுமார், நகர அவைத் தலைவர் நிர்மல் ஜெய்ன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் என். சேகர், முன்னால் கவுன்சிலர்கள் காேபி, உமா, அண்ணா வியாபாரிகள் சங்க செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.