கோவை: கொரோனா பாதுகாப்பு நிவாரண நிதிக்கு கோவை கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் ரூ.51 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
கோவை கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 51 லட்ச ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர் கே.சந்திர பிரகாஷ் வழங்கினார். மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் சானிட்டரி ( ஸ்பிரேயர் ) கோவை மாநகராட்சி வசம் வழங்கப்பட்டது.