நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நீர்மட்டம் உயர்வு..! பசுமையாக காட்சியளிக்கும் புல்வெளிகள் - பூக்க துவங்கிய பூக்கள்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் அளவு உயருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் அளவு உயருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கி இடைவிடாமல் நான்கு மாதங்கள் பெய்தது. இதனால், தென்மேற்கு பருவமழையால், அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இந்த தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் வரை இருந்தது. 



ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தேயிலை மகசூல் குறைந்தும், மலை காய்கறி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக சமவெளிப் பகுதிகளில் மின் தேவைக்காக அனைத்து நீர் மின் நிலையங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து உள்ளது. 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பனியில் கருகி போன தேயிலை செடிகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. அதேபோல், மலைப்பகுதிகளில் கூட விவசாயிகள் காய்கறி விவசாயம் துவக்கிவிட்டனர். வறண்டு போயிருந்த அனைத்து நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளது

வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. இதேபோன்று மேலும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் புல்வெளிகளில் பசுமை திரும்ப வாய்ப்புள்ளது.



அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் பசுமை போர்த்தி காணப்படுகிறது ஆள் நடமாட்டம் இல்லாததால் புற்கள் நன்கு வளர்ந்துள்ளன. 



மலர்கள் பூக்க தொடங்கி உள்ளதால் நீலகிரி முழுவதுமே இதமான காலநிலை காணப்படுகிறது. 



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...