கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 454 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக ரூ 43,100 விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கோவை புறநகரில் 385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டனர். 393 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.