கோவையில் இஸ்லாமிய குடியிருப்புகளில் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒத்துழைப்போடு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை!

கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் முயற்சியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, கொரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் முயற்சியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்லாமியர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் கொரோனா தொற்றின் அறிகுறிக்கான மருத்துவ பரிசோதனைகளை சுகாதாரத் துறையினர் அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து போத்தனூரிலுள்ள அரபு பள்ளி வாசலில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒத்துழைப்போடு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹீசேன் கூறியதாவது;-

இன்று நடைபெற்றுள்ள மருத்துவ பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு தொற்று இல்லை என தெரிவித்துள்ளது.

அதேபோல, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அனைத்து ஜமாத் சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளனர்.

ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி 13 நாட்கள் ஆவதாகவும், இவர்களுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்து, இல்லையெனில், நோய் தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அந்தந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்கள் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளை அணுகினால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு, இஸ்லாமிய இயக்கங்கள் முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...