ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம்; உரிய நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்களின் கோரிக்கை

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பொள்ளாச்சி, உலாந்தி மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் என 6 வனச்சரகங்கள் உள்ளடக்கிய வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான் என அபூர்வமான விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. 

ஆனைமலை புலிகள் காப்பக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட தம்மம்பதி அருகில் உள்ள புங்கன் ஓடை மற்றும் போத்தமடை வன பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் புலிகள் இறந்து கிடந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.



முதல் கட்ட உடற்கூறாய்வில் இறந்த காட்டுப் பன்றியின் உடலில் விஷம் வைத்துள்ளதாகவும், அதனை தின்ற புலி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

சமீபகாலமாக வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களிலுள்ள கால்நடைகளை, புலி வேட்டையாடி கொன்றுள்ளதாக உரிமையாளர்கள் வனத்துறையினரிடம் புகாரளித்திருந்தனர். புலி தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடியதால் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இரண்டு புலிகள் இறந்த சம்பவத்தில் பத்திரிகையாளர்களை வனத்துறையினர் அனுமதிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும், இரண்டு புலிகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புலிகள் காப்பகத்திற்குள்ளே விஷம் வைத்து ஆண், பெண் புலி கொல்லப்பட்ட சம்பவம் அதிகாரிகளின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது… இதுகுறித்து தேசிய அளவிலுள்ள புலிகள் காப்பக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...