நீலகிரியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

நீலகிரி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் தனியார் பங்களிப்புடன் 320க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட அவசரகால சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஆரம்பத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அதில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்து வந்ததும் அவர்களை கோவை ESI மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர். அதிகமாக வைரஸ் தாக்கம் காணப்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகையில் உள்ள 2 மாணவர் விடுதிகள் மற்றும் தனியார் பள்ளியில் அனுமதிக்கப்படும் வகையில் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகள் சுமார் 75% அரசால் வழங்கப்பட்டு முடிவு பெற்றுள்ளதாக கூறிய அவர், உள்ளாட்சி துறை சார்பில் 15 வகையான காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து அம்மா உணவகங்களில் இன்று முதல் மூன்று வேளை உணவும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பழங்குடியினருக்கு குடும்ப அட்டை இல்லாமல் உள்ள மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய தேவைகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றார். 

இதேபோல, குன்னூர் பகுதியில் இயங்கி வரும் பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பின் அவர்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள தேர்வு செய்யும் பொருட்டு அதற்குண்டான பணிகள் விரைவாக ஏற்படுத்தப்படும் என கூறினார்.

மேலும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகளை சந்தைப் படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள காய்கறி மொத்த மண்டிகள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையம் அருகில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...