கோவை: வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மருந்து தெளித்து குழி தோண்டி புதைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மீன் மார்க்கெட்டில் சட்டத்திற்கு புறம்பாக ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் சரவணபாபு வால்பாறை நகரில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுமார்க்கெட் பகுதியில் உள்ள ஜியோ என்பவரின் கடை சோதனையிடப்பட்டது.

இதில் ஒரு பெட்டி நிறைய ஓமன் நாட்டில் இருந்து ஊசி மூலம் பதப்படுத்தப்பட்ட மீனை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்டான்மோர் சந்திப்பில் ஒரு பெட்டி மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும் மேலும், வீட்டில் 9 பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், 11 பெட்டிகளில் இருந்த மீன்களை பறிமுதல் செய்து, மருந்து தெளித்து பின்னர் குழி தோண்டி புதைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.