உதகை அரசு மேல்நிலைப்பள்ளி காந்தி மைதான தற்காலிக உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதை..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

நீலகிரி: உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

நீலகிரி: உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், நேற்று வரை, 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் வருவாய் துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை ஆகியோர் இணைந்து தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உதகை அரசு மேல்நிலைப் பள்ளி காந்தி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுமார் தலா 80 ஆயிரம் மதிப்பிலான கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.



உதகை தற்காலிக உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி நுழைவு வாயிலை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். 



மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் புத்திசந்திரன், அமைப்பு செயலாளர் கே.ஆர்.ஆர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, இளைஞர் அணி மாவட்ட செயலாளரும் நீலகிரி மத்திய கூட்டுறவு தலைவருமான கப்பச்சி வினாத், கண்டோன்மெண்ட் துணை தலைவர் பாரதியார், நகர செயலாளர் சண்முகம், பாசறை செயலாளர் அக்கீம்பாபு, சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் டாக்டர் குருமூர்த்தி, ஓசிஎஸ் தலைவர் ஜெயராமன், வெலிங்டன் நகரிய செயலாளர் துரைராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...