சென்னை: கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேர் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு உள்ளதாகவும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.
2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருவதாக கூறினார்.
மேலும், கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது; இருப்பினும் தடுப்பு நடவடிக்கை தீவிரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த 7 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் பணியில் இருந்தபோது மாரடைப்பால் இறந்த காவலர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.