ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் - நா.கார்த்திக் எம்.எல்.ஏ வேண்டுகோள்

கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;-

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நலிவடைந்து சிரமப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த ஊரடங்கு உத்தரவால் எந்த வித வருமானம் இன்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ளப்பட முடியாததால் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, வரும் மாதத்திற்கு செலுத்த வேண்டுமென தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஆனால், மார்ச் மாதத்தில், நிறுவனங்கள் முழுமையாக செயல்படவில்லை. நிறுவனங்கள் செயல்படாமல், மிகப் பெரிய தொகையை மின் கட்டணமாக, ஏப்., 20க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, இந்நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தமிழக மின்சார வாரியம் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு குதிரை சக்திக்கும் ( ஹார்ஸ் பவர் ) குறைந்த பட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில் , சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு, இந்த குறைந்த பட்ச தொகையை முழுமையாக நீக்குவது, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்த 6 மாத கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, தொழில் கடன்களுக்கான வட்டியையும், மாதத் தவணையையும் ஜூன் மாதம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனால், நடைமுறையில் பல வங்கிகள் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. இந்த அறிவிப்பை கண்டிப்பாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், ஊரடங்கு முடிந்த பிறகு தொழில்கள் சிரமமின்றி நடைபெற மூலதனக் கடனாக 25% நீண்ட கால கடனாகவும் வட்டியில்லாமலும் வழங்கவேண்டும். 

மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறு மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...