வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவு!

கோவை: வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை: வால்பாறையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனருமான தெபா ஷுஷ் ஜானா, துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுறுத்தலின்படி தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகம் ஹைபாரஸ்ட் எஸ்டேட் காப்புக்காடு எல்லை பகுதியிலுள்ள தாய்முடி எஸ்டேட்டில் முள்ளம் பன்றியை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, வனச்சரக அலுவலர் நட்ராஜ் அறிவுரையின்படி கல்லார் பிரிவு வனவர் ஷேக்உமர் தலைமையில் வனக்காப்பாளர் சதாம் உசேன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினரால் தணிக்கை மேற்கொண்ட போது வேட்டையாடிய முள்ளம் பன்றியை சமைத்துக் கொண்டிருந்த கெஜமுடி எஸ்டேட்டை சேர்ந்த சிவா(36), மாரியப்பன்(56), கண்ணன்(53) ஆகியோரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்துள்ளனர்.

வனத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...