கோவையில் வருவாய் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு; 300 பேருக்கு உணவு வழங்கினார்

கோவை: கோவை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 300 பேருக்கு உணவை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 300 பேருக்கு உணவை வழங்கினார். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு கிடைக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய உணவுக்கூடம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கு உணவு வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை உணவு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி ஆய்வு செய்தார். பின்பு 300க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வழங்கினார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...