சென்னை முழுவதும் தனியார் உணவு டெலிவரி செய்பவர்கள் மூலம் நடமாடும் மளிகை, காய்கறி விநியோகம் - மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில் தொடங்கப்படஉள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



சென்னை: சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில் தொடங்கப்படஉள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பொதுமக்கள் சமூக விலகலைகடைபிடிக்க வைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இந்த நிலையில், சென்னை முழுவதும் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் விரைவில்தொடங்கப்பட உள்ளதாகவும் 5000 மூன்று சக்கர சைக்கிள்கள், 2000 சிறிய மோட்டார் வாகனங்கள்மூலம் விற்பனை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பை உணவுடெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டு உள்ளதாக சென்னை வளர்ச்சிகுழுமச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மேலும், காய்கறி தொகுப்பை 90256 53376, 044 2479113 என்ற எண்களில் சென்னை மக்கள் ஆர்டர்செய்யலாம் என்று சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...