ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு? வரும் 11ந் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்மோடி ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவை: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 690 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் சமூக விலகலை கடைபிடிக்க வைக்கவேண்டியதும் அவசியமாகும். தற்போதைய சூழலில் கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டமார்ச் 24ம் தேதியுடன் ஒப்பிடும் போது மிக கடுமையாக பரவி உள்ளது. இன்னும் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் மத்தியஅரசு, ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. 

இந்த சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ந் தேதி முடிவு எடுக்கஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வரும் 11ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன்பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...