இதில் ஆயுதப்படையைச் சேர்ந்த 267 காவலர்கள், பேரிடர் மீட்பு படையினர் 84 பேர், தமிழ்நாடு சிறப்புகாவலர்கள் 72 பேருக்கு கோவை மாவட்ட சுகாதார துறையைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட மருத்துவகுழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். சுழற்சி முறையில் பணிக்கு திரும்பியஇவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு கோவை மாவட்ட சுகாதார துறையைச்சேர்ந்த ஏழு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவலர்களுக்கு கோவை மாவட்ட சுகாதார துறைசார்பில் மருத்துவ பரிசோதனை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் காவலர் பயிற்சி பள்ளியில்நடைபெற்று வருகிறது.
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், சுழற்சி முறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுவருகிறது. சுகாதார துறை மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.