கோவை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் கோவையில் சுகாதாரத்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியோர் இணைந்து தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும் பொதுமக்களும் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சர்வ் இந்தியா மற்றும் ஸ்ரீ ஆனந்தாஸ் சார்பில், 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிருமி நாசினியானது 24 மணி நேரமும் தானாக இயங்கக்கூடியது.