கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ நோயாளிகளின்‌ உதவிக்காக வருபவர்கள்‌ தங்குவதற்காக ரூ.1 கோடி மதிப்பில்‌ புதிய கட்டிடம் திறப்பு!

கோவை: கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ நோயாளிகளின்‌ உதவிக்காக வருபவர்கள்‌ தங்குவதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பில்‌ புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை இன்று (07-04-2020) நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.


கோவை: கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ நோயாளிகளின்‌ உதவிக்காக வருபவர்கள்‌ தங்குவதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பில்‌ புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை இன்று (07-04-2020) நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌. 

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பி.ஆர்‌.ஜி. அருண்குமார்‌, அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவணர்குமார்‌ இ.ஆ.ப., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ பிரசன்னா இராமசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ ௮சோகன்‌, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்‌ பொன்முடிசெல்வன்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது ;-

கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை கோவை மாவட்ட மக்கள்‌ மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, ஆகிய மாவட்டங்களைச்‌ சார்ந்த பொதுமக்கள்‌ பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்‌. இம்மருத்துவமனையில்‌ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல்‌ மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயர்தர சிகிச்சைகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ புற நோயாளிகளாக ஒரு நாளுக்கு 4 ஆயிரம்‌ முதல்‌ 5 ஆயிரம்‌ நபர்கள்‌ சராசரியாக வந்து செல்கிறார்கள்‌. மேலும்‌, 1600 உள்நோயாளிகள்‌ சிகிச்சை பெற்று வருகிறார்கள்‌. மருத்துவமனையில்‌ தங்கி உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள்‌ ஓய்வெடுக்கவும்‌ இரவு நேரங்களில்‌ தங்குவதற்கு ஏதுவாகவும்‌ ரூ.1 கோடி மதிப்பில்‌ புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில்‌ 160 பேர்‌ தங்குவதற்கு ஏதுவாக படுக்கை வசதிகள்‌ அமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவர்கள்‌ முறையாக பயன்படுத்தி, சுகாதாரமாக வைத்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...