ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் கட்டமின்றி சாப்பிடலாம் எனவும் அதற்கான கட்டணத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளும் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதேபோல, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொரோனா பாதித்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், கொரோனா பாதித்த 59 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 2 ஆயிரத்து 626 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், 385 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தார். 

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை புறக்கணிக்காமல் சிகிச்சையளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...