கோவையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: கோவையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை மீறி ஊர் சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, கைது மற்றும் நூதன தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவையில் முக கவசம் அணியாமல் சாலையில் சென்ற 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய்கார்த்திக், ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த முத்தழகு, வைபவ், வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த அசோக், முகமது அஸ்லாம், கிருஷ்ணன் மோகன்தாஸ், சதீஷ்குமார், சுதீர் சர்மா ஆகிய 8 பேர் மீது காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர். மேலும் 8 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது கோவையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...