திருப்பூர்: லண்டன் சென்று திருப்பூர் திரும்பிய கொரோனா தொற்றால் முதன்முதலாக பாதிக்கப்பட்டவர் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து இன்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், லண்டன் சென்று திருப்பூர் திரும்பியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒருவர் குணமாகி உள்ளதால் கொரோனா பாதிப்பு 6 ஆக குறைந்துள்ளது.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 939 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 54 பேருக்கு தொற்று இல்லை என கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.