தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இளைஞர் கைது

கோவை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் அளித்த புகாரின் பேரில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் குறித்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தவறாக சித்தரித்துப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்தவரை அவதூறு பரப்பியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் ரியாஸ்கான்(22) முதலமைச்சர் குறித்து சமூக வலைதளம் மற்றும் செயலியில் அவதூறு பரப்பியதாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் கறுப்புக்குதிரை என்ற பெயரில் தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை பற்றி கேலி, கிண்டல் செய்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கறுப்புக்குதிரை என்ற பெயரில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இணையதள இன்ஜினியர் சுதர்சன்(22) எனத் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...