கோவை சீஷா தொண்டு நிறுவனம் சார்பாக மாணவர்கள் தயார் செய்த மேலும் 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

கோவை: கோவை சீஷா தொண்டு நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவர்கள் தயார் செய்த 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை சீஷா தொண்டு நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவர்கள் தயார் செய்த 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கப்பட்டது.

உலக நாடுகளில் பரவிவந்த கொரோனா இந்தியாவை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. 



இந்நிலையில், கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை சீஷா தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில், சீஷா சார்பாக 150 லிட்டர் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது. 

இது குறித்து சீஷா தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாமுவேல் தாமஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக கவசம், சானிடைசர், சோப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக எங்களது பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சொந்த தயாரிப்பாக உலக சுகாதாரத்துறை விதிகளின் படி கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர்களை தயாரித்து வருவதாகவும், ஏற்கனவே மாநகராட்சி ஆணையரிடம் 100 லிட்டர் கிருமி நாசினி திரவம் வழங்கியுள்ளதாகவும், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் 150 லிட்டர் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...