திருப்பூர்: திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூர்: திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பல்லடம் சாலையில் வித்யாலயா அருகில் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் திருநெல்வேலி, சிவகாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரிய வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இங்கு ரேஷன் கார்டுகள் இல்லாத சூழலில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கையிருப்பில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் தீர்ந்து விட்ட சூழ்நிலையில் தற்போது உணவுக்கே வழி இல்லாமல் இருப்பதாகவும் ஆனால் அதிகாரிகள் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டி இன்று சுண்டமேடு பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆதாரங்கள் சொந்த ஊரில் இருக்கின்ற சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது அதை எடுத்து வர முடியாத சூழல் இருப்பதாகவும் அதுவரை மாவட்ட நிர்வாகம் எங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இல்லை என்றால் கொரோனா வந்து சாவதற்கு பதில் வறுமையில் செத்து விடுவோம் என்கிற சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.