திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கென கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனவும் திருப்பூரில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த மாநகராட்சிக்குள் மூன்று பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கிருமிநாசினி பாதையினை மத்திய நிதியமைச்சர் பாராட்டியுள்ளார் எனவும் திருப்பூர் மாவட்டத்தில் 6,45,920 ரேசன் கார்டுகளுக்கு நிவாரண தொகை மற்றும் பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மீதமுள்ளவர்களுக்கு இம்மாத இறுதி வரை வழங்கப்படும் என்றார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 1,28,665 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க தயாராக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.