நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்காவலில் கண்காணிக்கப்பட்ட 1312 நபர்களில் 770 நபர்கள் முழு கண்காணிப்பு காலத்தை முழுமையாக முடித்துள்ளதாகவும் தற்போது 442 நபர்கள் மட்டுமே வீட்டு கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் நீலகிரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்காவலில் கண்காணிக்கப்பட்ட 1312 நபர்களில் 770 நபர்கள் முழு கண்காணிப்பு காலத்தை முழுமையாக முடித்துள்ளதாகவும் தற்போது தொடர் கண்காணிப்பில் 442 நபர்கள் இருப்பதாகவும் அவர்களை சுகாதாரப் பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து வருவதாக கூறினார்.
மேலும், நூறு பேர் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பில் இருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் டெல்லி மாநாடு சென்று வந்த 8 நபர்களில் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் நான்கு பேர் இருப்பதாகவும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நான்கு நபர்கள் வசித்த பகுதியான காந்தல், குன்னூர், கோத்தகிரி பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் இருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் நோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை அனைத்தும் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.