கோவை: கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தூய்மை தொழிலாளர்களுக்கு நோய்த்தொற்று சோதனை நடத்துவதுடன் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை மாவட்டத்தில் அணி திரட்டப்பட்ட இன்ஜினியரிங் பஞ்சாலை தொழில்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வரும் நிலையில் முறையாக ஊதியம் வழங்காதது தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தொழிலாளர் துறை உடனடியாக அரசாணை வழங்குவதோடு தொடர் கண்காணிப்பும் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. எனவே, கூடுதல் கவனம் எடுத்து தூய்மை தொழிலாளர்களுக்கு நோய்த்தொற்று சோதனை நடத்துவதுடன் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
கோவை மாவட்டம் முழுவதும் லட்சத்திற்கும் மேற்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கிறார்கள். சில வாரியங்களில் பணமே கிடையாது. எனவே வேலையின்றி தவிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள பண உதவி மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் பெரும் குறைபாடு தெரிகிறது. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வார்டுக்குள் பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் தங்குமிடம் என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதிக்கும். ஆகவே இவர்கள் பணி ஓய்வு நேரத்தில் தங்கி ஓய்வு எடுப்பதற்கான இடம் ஏற்பாடு செய்திட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதேபோல, கோவை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் மிகவும் நவீனப்படுத்தப்பட்டது. இதனை கிருமிநாசினி தெளிப்பதற்கு வஜ்ரா வாகனத்தை போல பயன்படுத்துவதற்கு உதவி புரியும். ஆகவே இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், அவசர அவசியமான இத்தேவைகளை முதலமைச்சர் அவர்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.