காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குன்னூர் நகர பாஜக சார்பில் பாதபூஜை!

நீலகிரி: குன்னூரில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குன்னூர் நகர பாஜக சார்பில் பாதபூஜை செய்து நன்றி செலுத்தினர்.


நீலகிரி: குன்னூரில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குன்னூர் நகர பாஜக சார்பில் பாதபூஜை செய்து நன்றி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் காெராேனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குன்னூர் நகர பாஜக சார்பில் அதன் தலைவர் குங்கும ராஜ் தலைமையில் நகரம் முழுவதும் ஆங்காங்கே கிருமி நாசினிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 



இதனை தொடர்ந்து, நகர் பகுதியை சுற்றிலும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது.



முன்னதாக, தூய்மைப் பணியாளர்கள் கால்களுக்கு மஞ்சள் நீரின் மூலம் கழுவி மலர்கள் பாேட்டு பூஜை செய்தனர். மேலும், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் பாப்பண்ன் ஆகியாேர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர பொதுச் செயலாளர்கள் பாலாஜி, சரவணன், நகர துணைத் தலைவர் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...