கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு பகலாக உழைக்கும் தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்த பெண்கள்..!

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு பகலாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களை போற்றும் விதமாக பல்லடத்தில் தூய்மை பணியாளரின் பாதங்களை கழுவி, பொட்டு வைத்து மலர் தூவி வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு பகலாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களை போற்றும் விதமாக பல்லடத்தில் தூய்மை பணியாளரின் பாதங்களை கழுவி, பொட்டு வைத்து மலர் தூவி வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாடே முடங்கியுள்ள நிலையில், இரவு பகலாக நாட்டு மக்களை பாதுகாக்க காவல்துறை, மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உழைத்து வருகின்றனர்.



இந்த நிலையில், அவர்களின் பணியை போற்றும் விதமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி நகரைச் சேர்ந்தவர் புஷ்பா மற்றும் அவரது மகள் அம்மு இருவரும் தங்களது வீட்டின் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் வசந்தா என்பவரது பாதங்களை கழுவி, பொட்டு வைத்து மலர் தூவி வணங்கினர். மேலும், அவர்கள் கடவுளாக நினைக்கும் குருஜி ஸ்ரீநாத் ரவிசங்கர் அவர்களின் உருவப் படத்திற்கு போடப்பட்டிருந்த மலர்மாலையை அவருக்கு அணிவித்து மரியாதை செய்தனர். 



மேலும், பண மாலையை அந்த தூய்மைப் பணியாளருக்கு அணிவித்தனர். தூய்மை பணியாளர்களும் காவலர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை உணர்த்திய அவர்கள், அந்த தூய்மை பணியாளர் வசந்தாவிற்கு சேலை ஒன்றையும் வழங்கினர். 



தூய்மை பணியாளர்களை கடவுளாக நினைத்து புஷ்பா மற்றும் அம்மு பாதங்களை கழுவி பூஜை செய்யும் இந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பரவி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஊரையே தூய்மையாக்கும் தூய்மை காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...