தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கோவையில் மேலும் 29 பேர் பாதிப்பு!

கோவை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 485ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் ஆவர். மேலும் ஒருவர் துபாயிலிருந்து வந்தவர்.

இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 86 பேரில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 99 பேரை தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், கோவையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்பு 58ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் சென்னை(95) முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு(661) அடுத்த இடத்தில் தமிழ்நாடு(571) உள்ளது.

கோவையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 29 பேரில் 20 பேர் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையில் 3 பேரும், அன்னூர் அரசு மருத்துவமனையில் 5 பேரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...