மேட்டுப்பாளையத்தில் வனத்துறை அமைத்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டியானை; இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் குட்டியை மீட்ட தாய் யானை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி அழையும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் வனவிலங்குளின் தாகத்தை தீர்க்க வனத்துறை சார்பில் வனத்திலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகளை அமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஒரளவிற்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி அழையும் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் வனவிலங்குளின் தாகத்தை தீர்க்க வனத்துறை சார்பில் வனத்திலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகளை அமைத்து அதில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஒரளவிற்கு பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மரக்கிடங்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரினை தேடி ஏழு யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் வந்துள்ளது.

அப்போது யானைகள் கூட்டமாக தண்ணீர் குடித்து கொண்டிருந்த போது ஒரு குட்டியானை ஒன்று தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டது, இதனையடுத்து அந்த யானை கூட்டத்தில் இருந்த சில யானைகள் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் தாய் யானையும் உடன் வந்த மற்றொரு யானையும் அந்த தொட்டியையே சுற்றி சுற்றி வந்துள்ளது, இதனை கண்ட வனத்துறையினர் குட்டியானையை மீட்க ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி யானையை விரட்டி விட்டு குட்டியானையை மீட்க திட்டமிட்டனர். 

ஆனால் அங்கிருந்த  தாய் யானை சுமார் 2 மணி நேரமாக போராடி தனது விடா முயற்சியால் குட்டியானையை காப்பற்றி தன்னுடன் அழைத்து சென்றது, இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...