கோவை: அன்னூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் சந்தையை அப்புறப்படுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தையானது செயல்பட்டு வந்தது, வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் நடைபெறும் இந்த சந்தையில் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என 100க்கும் மேற்பட்டோர் கடைகளை அமைத்து வருகின்றனர். அன்னூரில் மார்க்கெட் இல்லாததால் அன்னூரைச் சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்கள் பொருட்களை வாங்கி செல்ல இந்த சந்தையை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்த நிலையில், கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக இந்த வாரச்சந்தையானது மூடப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு இந்த வாரம் வாரச்சந்தையானது அன்னூர் பேருந்து நிலையத்தில் கூடியது.
இந்த சந்தையில் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் பொருட்களை வாங்குவோரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கூடிய வாரச்சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் கூடினர்.
ஆனால், அரசு கூறிய விதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாகவே நின்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சந்தையை ஆய்வு செய்ய அங்கு வந்த அன்னூர் வட்டாட்சியர் சந்திரா, மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, காவல்துறை மூலம் உடனடியாக சந்தையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதனால் இன்று நடைபெற்று வந்த சந்தை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வாங்க வந்த பொதுமக்களையும் திருப்பி அனுப்பிவைத்தனர்.
பல முறை சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியும் அதனை மக்கள் கடைபிடிக்காததால் வேறு வழியின்றி ரத்து செய்யப்படுவதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இதனால் பொருட்களை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.