நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய 993 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய 993 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 347 கார்கள், இருசக்கர வாகனங்கள், என கடந்த 25ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டம் இல்லாத சூழல் தான் காெராேனா பரவாமல் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று அரசு அறிவித்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதையும் மீறி சிலர் வாகனங்களிலும், குழுவாக நடந்தும் வருவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.