கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க திமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நா.கார்த்திக் வழங்கினார்.

கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வரும் வேளையில் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என திமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.
இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு, திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ, தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஏற்கனவே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோசலையை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக தலைவர் அறிவுறுத்தலின்படி கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டின் மருந்துவ உபகரணங்கள் வாங்க இதுவரை 30 லட்சம் ரூபாய் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதாக தெரிவித்தார்.