திருப்பூர்: திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், திருப்பூரில் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி சுரங்கத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
காய்கறிகள் வாங்க வரும் அனைவரும் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்குள் நுழைந்து சென்றுதான் காய்கறிகளை வாங்க முடியும். பொதுமக்கள் தங்கள் கைகளைக் கழுவியபின் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும். அவர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.