வால்பாறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் காய்கறி சந்தை அமைப்பு

கோவை: வால்பாறையில் சமூக விலக்கை கடைபிடிக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் சமூக விலக்கை கடைபிடிக்க அரசு மேல்நிலைப் பள்ளியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மளிகை, காய்கறி, பால், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சமூக விலக்கை கடைபிடித்து திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் சமூக விலக்கை மறந்து பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், தேயிலை தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கானவர்கள் வால்பாறைக்கு வருவர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. 



இதனை தவிர்க்கும் பொருட்டு வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உத்திரவின் பேரில், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் கடைகளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதேபோல, மக்கள் வரிசையாக ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்கிச்செல்லும்படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை, கை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...