ஈஷாவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர்‌ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‌; தமிழக காவல்துறையிடம்‌ ஈஷா அறக்கட்டளை புகார்‌

கோவை: கொரோனா வைரஸ்‌ தொடர்பாக மக்கள்‌ மத்தியில்‌ பீதியை கிளப்பும்‌ விதமாகவும்‌, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பும்‌ விதமாகவும்‌ செய்திகள்‌ வெளியிடும்‌ நபர்கள்‌ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையிடம்‌ ஈஷா அறக்கட்டளை புகார்‌ அளித்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ்‌ தொடர்பாக மக்கள்‌ மத்தியில்‌ பீதியை கிளப்பும்‌ விதமாகவும்‌, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அவதூறு பரப்பும்‌ விதமாகவும்‌ செய்திகள்‌ வெளியிடும்‌ நபர்கள்‌ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையிடம்‌ ஈஷா அறக்கட்டளை புகார்‌ அளித்துள்ளது.

கொரோனா வைரஸ்‌ பாதிப்பால்‌ இந்தியாவில்‌ முன்னெப்போதும்‌ இல்லாத வகையில்‌ இக்கட்டான மற்றும்‌ சவாலான சூழல்‌ நிலவி வருகிறது. இந்நிலையில்‌, கடந்த பிப்ரவரி 21-ம்‌ தேதி நடந்த ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தொடர்புப்படுத்தி, சில ஊடகங்கள்‌, சில அமைப்புகள்‌ மற்றும்‌ தனிநபர்கள்‌ சமூக வலைதளங்களில்‌ பல தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்‌.

பொதுவாக, ஒருவர்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டால்‌ அதிகபட்சம்‌ 14 நாட்களுக்குள்‌ அதற்கான அறிகுறி வெளியில்‌ தெரிந்துவிடும்‌ என்பது அனைவரும்‌ அறிந்ததே. இது தெரிந்தும்‌, ஈஷா மஹாசிவராத்திரி விழா நடந்து முடிந்து 40 நாட்கள்‌ ஆன பிறகு, பொது அமைதியை சீர்குலைக்கும்‌ விதமாக, ஆதாரமற்ற வதந்திகள்‌ பரப்புவதை ஈஷா அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது.

இந்த செயல்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌ தேவையற்ற அச்சத்தையும்‌, பீதியையும்‌ கிளப்பும்‌ வகையில்‌ உள்ளது. மேலும்‌, ஈஷாவின்‌ நற்பெயருக்கு களங்கம்‌ விளைவிக்கும்‌ உள்நோக்கத்துடனும்‌ இது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, போதிய விளக்கங்களை ஈஷா அறக்கட்டளை பத்திரிக்கை செய்திகள்‌ மூலம்‌ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இத்தகைய கூழலில்‌, பேஸ்புக்‌, ட்விட்டர்‌, யூ-டியூப்‌ போன்ற சமூக வலைதளங்கள்‌, ஆன்லைன்‌ செய்தி ஊடகங்கள்‌, அச்சு மற்றும்‌ தொலைக்காட்சி ஊடகங்களில்‌ ஈஷாவுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டவர்கள்‌ மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...