கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம் - பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய் தொற்று எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது. 

இதனால் பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை ஒன்று தான் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

மேலும், நல்ல விஷயம் என்னவென்றால், நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள் என்றும், யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவைப்படவில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் கொரோனா பயப்படக்கூடிய நோய் இல்லை என்றும், தொற்று ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்துவிடலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

அதேபோல, தமிழகத்தில் சமூக பரவல் என்ற நிலை ஏற்படவில்லை எனவும் வைரஸ் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துவிட்டால் மறுபடி பாசிட்டிவ் என்று வராது என்று அர்த்தம் கிடையாது. மறுநாளே கூட பாசிட்டிவ் ஏற்படலாம். எனவேதான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பதற்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வருவதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...