கோவையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரை தாக்கிய வழக்கில் பெண் கைது

கோவை: கோவையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரை தாக்கிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரை தாக்கிய வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் ரேசன் கடை எண்:33. இதில் மதுக்கரை மார்கெட் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி ரேசன் கடையில் தற்காலிக பொருட்கள் வழங்கும் பணியில் உள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ரபியாதுல் பஸ்ரியா பொருட்களை வாங்க சென்றுள்ளார். 

அப்போது, பொருட்களை விநியோகம் செய்வதில் எழுந்த பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ரபியதுல் பஸ்ரியா கடை ஊழியரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாக்கியலட்சுமி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனை தொடர்ந்து, ரபியதுல் பஸ்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...