திருப்பூர்: திருப்பூரில் ரேசன் பொருட்கள் பெற முடியாமல் தவித்து வரும் 10 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியானதுமே பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூரில் தங்கி வேலைபார்த்த தொழிலாளர்கள் அனைவரும் பேருந்து, கார், வேன் என பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஆனால், ரெயில் சேவை இல்லாததால் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே தங்கி இருக்கின்றனர்.
பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரில்தான் இருப்பார்கள். எனவே, தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பணம் தங்கள் கையில் இல்லாமல் உணவு உள்ளிட்ட அடிப்படை செலவுகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், திருப்பூரில் ரேசன் பொருட்கள் பெற முடியாமல் தவித்து வரும் 10 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, திருப்பூரில் தங்கியுள்ள மற்ற மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;-
திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு மண்டலத்தில் 3666 குடும்பங்களும், தெற்கு 3051 குடும்பங்களும், அவினாசியில் 1611 குடும்பங்களும், ஊத்துக்குளி 109, பல்லடம் 1274, தாராபுரம் 12, காங்கேயம் 18, உடுமலை 30, மடத்துக்குளம் 10 என மொத்தம் 9781 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த 3781 குடும்பங்களில் வசிக்கும் 39,124 பேருக்கு தற்போது வரை உணவு, ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.