கோவை: இஸ்லாமிய சமுதாயத்தை கொரோனாவோடு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டிற்கு கோவையில் இருந்து சென்றவர்கள் தாமாகவே முன்வந்து தங்களை சோதனைக்கு உட்பட்டு வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தொற்று இல்லாதவர்களையும் அரசாங்க உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தி வைக்கபட்டு உள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்கு உண்டான பொறுப்பை இஸ்லாமிய கூட்டமைப்பு எடுத்து கொள்கிறோம் என கேட்டு உள்ளதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் மீது தவறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் கொரோனா தொற்று என சந்தேகப்படும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பாதிப்பு உள்ளதா என இதுவரை பரிசோதனைகள் செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் எனவும் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அச்சமின்றி அவர்களும் அருகில் வசிப்பவர்களும் இருப்பார்கள் என்று கூறிய அவர், இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், கோவையில் இருந்து 35 பேர் டெல்லி சென்றதாகவும் அவர்களில் கொரொனா தொற்று 21 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மீதி 14 பேருக்கு இல்லை என அறிக்கை வந்துள்ளதாக ராஜா உசேன் தெரிவித்தார்.