கோவையில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும் - எம்எல்ஏ நா கார்த்திக் கோரிக்கை

கோவை: கோவையில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும், என ஆட்சியருக்கு சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ நா கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: கோவையில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும், என ஆட்சியருக்கு சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ நா கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த கோரிக்கை மனுவில், கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் கொரோனா நிவாரண உதவியாக அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் அரிசி, சர்க்கரை துவரம் பருப்பு, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும், வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் முறையான அளவில்லாமலும், ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு அளவு விநியோகிக்கப்படுகிறது எனவும், குறிப்பாக நான்கு பேர் கொண்ட குடும்ப அட்டைக்கு புலுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை ஆகிய மூன்றும் இணைந்து 20 கிலோ வழங்கப்பட வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார். 

ஆனால் பல கடைகளில் இந்த அளவு போடாமல் அளவு குறைத்து 15 அல்லது 16 கிலோ தான் வழங்கப்படுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர், நா கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்து , மிகுந்த அச்சமடைந்திருக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் தரமில்லாத , அளவு குறைந்த இந்த உணவுப்பொருள்களை, வேறு வழியின்றி மிகுந்த வேதனையுடன் வாங்கிச் செல்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய சூழலில், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் அரிசி, சர்க்கரை துவரம் பருப்பு, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருள்களை தரமாகவும் , சரியான அளவிலும், வழங்கப் படுவதற்கு , ஆட்சியர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து மக்களின் துயர் துடைக்க உதவிட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...