கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்துவருவதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றச்சாட்டு

திருப்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்துவருவதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் விளம்பரம் செய்துவருவதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் விளக்குகளை அணைப்பதன் மூலமும், அகல்விளக்கை ஏற்றுவதன் மூலமும் அறிவியல் பூர்வமான காரணம் உண்டா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்சின் தலைவர் அல்ல, அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டிய இந்தியாவின் பிரதமர். நாடாளுமன்றத்தைப் புதுப்பிக்க 20 ஆயிரம் கோடி, 130 கோடி மக்களுக்கு நோய்தொற்று தவிர்க்க 15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது போதுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அனைத்துக்கட்சி ஆலோசனை தேவையில்லை என முதல்வர் தெரிவித்திருப்பது சரியில்லை எனவும் இப்போது தமிழகம் கொரோனா தொற்றில் 2வது இடம் வந்திருப்பதாகவும், ரேசன் கடைகளில் அதிமுக, பாஜக கட்சிகளின் தலையீடு, ரேசன் கடை முன்பு அதிமுக பேனர் வைத்து அரசியல் விளம்பரம் செய்துவருகிறார்கள். இதுகுறித்து புகார் அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான் அழைத்தும் தாசில்தார் அழைப்பை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதேபோல, மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரையும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில்லை எனவும் தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். பதில் இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அத்துமீறல்கள் உள்ளதால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதுபோல சர்வ கட்சி குழு அமைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...