கோவை: கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தம் இரண்டு காவல் எல்லைகளிலும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 482 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 526 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி போலீசார் தற்போது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 29 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, கோவை புறநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 372 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 370 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.