கோவை: கொரோனா தொற்று உள்ளதாக தன் மீது வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி கிளை செயலாளர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தமிழ் புலிகள் கட்சியின் பாப்பம்பட்டி காந்தி நகர் பகுதி கிளை செயலாளராக உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார்.
இந்த நிலையில், வெறுப்பின் காரணமாக சிலர் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்ஸ் அப்பில் வதந்தியை பரப்பி வருவதாகவும் இதனால் தானும் தன் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், வதந்தி காரணமாக ஊர் பொதுமக்கள் பொது இடங்களில் நடமாட தடை விதித்து உள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்த அவர், தன் மீது அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.