கோவை: கோவையில் உடல்நிலை சரியாகாத விரக்தியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே உள்ள ஆவாரம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சரஸ்வதி வயது(65). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தன் காரணமாக கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த சரஸ்வதி விரக்தியின் காரணமாக நேற்று முன்தினம் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடலில் பரவியது.
இதையடுத்து, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.