அவசர பாஸ் வழங்கும் நடைமுறையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்..! இனி மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டுமே அதிகாரம்

சென்னை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்த நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

சென்னை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்த நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய மூன்று தேவைகளுக்காக மட்டும் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்தது. 

இதனை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் வழங்கி வந்தனர். இந்த நிலையில், இனிமேல் தாசில்தார்களிடம் இருந்தோ, நகராட்சி ஆணையர்களிடம் இருந்தோ அவசர பாஸ் பெற முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் வெளியே சுற்றுவதால் தமிழக அரசு இந்த அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது;-

பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கும் விவகாரத்தில் தாசில்தார்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் சாலைகளில் நடமாடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பழைய நடைமுறைப்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மூலம் மட்டுமே இனி பொதுமக்களுக்கு அவசர பாஸ் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்குமாறு முதல்வர்களுக்கு கானொலி மூலம் பிரதமர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...