கோவை: கோவை காந்திபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனாவசியமான சுற்றித்திரிந்தவர்களை பிடித்த போலீசார் அவர்களை நூதன முறையில் தோப்புக்கரணம் போட வைத்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதனால் அனாவசியமாக யாரும் சாலையில் பயணிக்க கூடாது எனவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் நாடு முழுவதும் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு காவல் ஆய்வாளர் முத்துமாலை தலைமையிலான குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அனாவசியமாக சாலையில் பயணித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் தேவையற்ற பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் 144 தடை உத்தரவை மீறியதால் நூதன முறையில் தோப்புக்கரணம் போடவைத்தனர்.
இந்த நூதன முறையிலான தண்டனை கட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.