கொரோனா வைரஸ்‌ பரவி வரும்‌ சூழலில்‌ மதத்தை வைத்து பிரச்சனை உருவாக்க வேண்டாம்‌ - சத்குரு வேண்டுகோள்‌

கோவை: இந்தியாவில்‌ கொரோனா வைரஸ்‌ பரவி வரும்‌ சூழலில்‌ மதத்தை வைத்து சமூகத்தில்‌ தேவையற்ற பிரச்சினையை உருவாக்க வேண்டாம்‌ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

கோவை: இந்தியாவில்‌ கொரோனா வைரஸ்‌ பரவி வரும்‌ சூழலில்‌ மதத்தை வைத்து சமூகத்தில்‌ தேவையற்ற பிரச்சினையை உருவாக்க வேண்டாம்‌ என ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ கூறியுள்ளதாவது:-

கொரோனா வைரசானது நம்‌ தலைமுறையில்‌ நாம்‌ சந்திக்கும்‌ மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில்‌ ஜாதி, மதம்‌ மற்றும்‌ இனத்தின் பெயரில்‌ ஒரு பிரிவினையை உருவாக்க கூடாது. ஏதோ, ஒரு குறிப்பிட்ட மதத்தினரால்‌ தான்‌ இந்த நோய்‌ தொற்று பரவுகிறது என்ற தவறான செய்தியை நாம்‌ பரப்ப கூடாது.

உலகமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கும்‌ போது, நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து செயல்புரிய வேண்டியது அவசியம்‌. அதைவிடுத்து, மதத்தை வைத்து சமூகத்தில்‌ தேவையற்ற பிரச்சினையை உருவாக்க கூடாது.

இந்த விஷயத்தில்‌ நாம்‌ அனைவரும்‌ மிகுந்த பொறுப்புணர்வோடும்‌ விழிப்புணர்வோடும்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. கொரோனா வைரசால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படாமல்‌, சிறிய அளவிலேயே இந்த பிரச்சினையை நாம்‌ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்‌. இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...